கோவையில் முதல் முறையாக கேட்டரி கிளப் சார்பில் பூனைகள் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் டெக்சிட்டி ஹாலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு நாட்டு பூனைகள், வீட்டு பூனைகள் வரவழைக்கப்பட்டன. பூனைகளை பற்றி பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு வகையான பூனைகளின் படங்கள் கருத்தரங்கில் இடம்பெற்றன.
தமிழ்நாட்டில் முதல்முறையாக பூனைக் கண்காட்சி!
கோவை: : தமிழ்நாட்டில் முதல் முறையாக கேட்டரி கிளப் சார்பில் பூனைகள் கண்காட்சி நடைபெற்றது.
இந்நிலையில், இதுகுறித்து கோவை கேட்டரி கிளப் அமைப்பின் அர்த்தனாரி பிரதாப் பேசுகையில், கோவையில் அலையன்ஸ் ஆஃப் கேட் பேன்ஸியர் இந்தியா என்ற அமைப்பின் அங்கீகாரத்துடன், கேட்டரி கிளப் என்ற பெயரில் பூனைகளின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பூனைகளுக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி, குடல்புழு நீக்கம் ஆகிய மருத்துவ வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், உலகம் முழுவதும் 93 வகையான பூனை இனங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 41 வகையான பூனைகள் உள்ளன. கோவையில் பெர்சியன் லாங் பூனைகள், பெர்சியன் சாட் பூனைகள், ஹிமாலயன் பூனைகள், பெங்கால் பூனைகள், சியாமிஸ் பூனைகள், சைபீரியன், ரஷ்யன் ப்ளூ, இந்தியன் நாட்டு வகை பூனைகள் உள்ளன என்றார்.