தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 20, 2019, 4:47 AM IST

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 33 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்!

கோவை: காருண்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 33 அடி உயரம்கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

students build Christmas tree in karunya university
students build Christmas tree in karunya university

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காருண்யா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 33 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த மரத்தை உருவாக்கியுள்ளனர். வண்ண விளக்குகளாலும் வண்ண வண்ண காகிதங்கள் கொண்டும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

மேலும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றிலும் பரிசு பொருட்களையும் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாக வைத்துள்ளனர். இந்த மரத்தின் முன்பு மாணவர்கள் பலரும் செல்ஃபி (சுயப்படம்) எடுத்துக்கொண்டனர்.

33 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் 100 மாணவர்கள் இணைந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு பாடல்களைப் பாடினர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடினர். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details