கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தற்போது குறைந்தளவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இனி வருகின்ற நாள்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அதேபோன்று இந்தாண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், கரோனா தொற்று காரணமாக ரயில் சேவை நான்கு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்திருந்த நிலையில் தற்போது ரயில்கள் அனைத்தும் தூய்மை செய்யும் பணிகள் கோவையில் தொடங்கியுள்ளது.
இதனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு, முன்பதிவு அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. முன்பதிவு செய்ய வரும் அனைத்து பயணிகளும் தகுந்த இடைவெளியை பின்பற்றி நின்று முன்பதிவு செய்யும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.