கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் மற்றும் கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, அவினாசி சாலையில் அதிமுக கொடிக் கம்பம் சாயந்து விபத்து ஏற்பட்டு இடதுகாலை இழந்த ராஜேஸ்வரி என்பவருக்கு சங்கனூர் கிராம உதவியாளர் பணிநியமன ஆணையை எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, “கோவையில் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை காண ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வர வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 6.97 லட்சம் சுய உதவிக்குழுக்களில் 103.32 உறுப்பினர்கள் உள்ளனர். 2011ஆம் ஆண்டிலிருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63 ஆயிரத்து 879 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.