தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை' - தென்னக ரயில்வே பொது மேலாளர்!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை என்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.

jhon thomas
jhon thomas

By

Published : Dec 13, 2019, 8:15 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்குத் தனி ரயில் மூலம் தென்னக ரயில்வே வந்த பொது மேலாளர் ஜான் தாமஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், 'பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட வேண்டும், தைப்பூசம், கிறிஸ்துமஸ் விழா காலங்களில் வேளாங்கண்ணி, பழனி ஆகிய இடங்களுக்குச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். பொள்ளாச்சி ரயில் பாதையை மின்மயமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை' பொது மேலாளர் ஜான் தாமஸிடம் வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், "பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்துடன் இணைத்து அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. எனவே சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை. பொள்ளாச்சி வழியாக சென்றுகொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்தியாளர் சந்திப்பின்போது ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்

பொள்ளாச்சி-கோவை , பொள்ளாச்சி - திண்டுக்கல் வரை மின்சாரப்பாதை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் கூறப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுக்குள் அதற்கான பணிகள் முடிவடையும். கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: இரவு நேரம்... ஃபாலோ செய்த 7 பேர்... பைக்கில் சென்றவரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details