கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு சார்பில் போடப்படும் இலவச தடுப்பூசிகள் டோக்கன் முறையில் செலுத்தப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் தடுப்பூசிகள் குறைந்தளவாகவே வருவதாகவும் அதனால் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுவருவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.
கோவை மாவட்டத்திலும் மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டோக்கன்கள் முறையில் நாள்தோறும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.
எனினும் பல்வேறு இடங்களில் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லை என்றும், பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதாகவும் மக்கள் கூறிவருகின்றனர்.
இதனால் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியலிலும் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ள தரப்படும் டோக்கன்களை ஒரு சிலர் அதிக அளவு பெற்றுக்கொண்டு அதனை பொதுமக்களுக்கு விற்றுவிடுவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.