தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 17, 2020, 8:59 PM IST

Updated : Jun 21, 2020, 9:02 AM IST

ETV Bharat / state

ஓய்வு நேரங்களில் ஓவியம் வரையும் வருவாய் ஆய்வாளர்!

கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி புரிந்துவரும் வரும் கங்காதரன், ஓய்வு நேரங்களில் ஓவியங்களை வரைந்து தனது நண்பர்களுக்கு பரிசாக வழங்கிவருகிறார். இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு...

முதுநிலை வருவாய் ஆய்வாளர் கங்காதரன்
முதுநிலை வருவாய் ஆய்வாளர் கங்காதரன்

பிறந்தநாள் அல்லது திருமண நாளில் சம்பந்தப்பட்ட நபர்களின் உருவத்தை ஓவியமாக வரைந்து பரிசு அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஒருவர். கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சின்னையன், பூபதி தம்பதியினரின் இளையமகன் கங்காதரன் தான் அந்த ஓவியர்.

கடந்த 2015ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கங்காதரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார். தனது பள்ளி பருவத்தில் ஓவியம் வரையும் தூரிகையை தனதாக்கிக்கொண்டார். எவ்வித நிகழ்வுகளுக்கு சென்றாலும் மறக்காமல் தன்னுடைய பரிசாக ஓவியங்களை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளார்.

உயிருட்டும் வகையில் காணப்படும் ஓவியங்கள்

தேச தலைவர்கள் காந்தி, அம்பேத்கர், சுபாஷ், சந்திரபோஸ் உள்ளிட்டோரின் வரைபடத்தையும் வரைந்துள்ளார். அதுபோல புரூஸ்லி, மர்லின் மன்றோ, அருனால்டு, நாகேஷ், வடிவேலு, ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா போன்ற திரைபிரபலங்களின் உருவத்தையும் மிகவும் தத்ரூபமாக வரைந்து வைத்துள்ளார். இந்த ஓவியங்கள் அனைத்தும் பார்ப்பவரின் கண் கவரும் வண்ணம், தனது திறமையால் உயிரோட்டமுள்ள ஓவியங்களாக வரைந்து அசத்தியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு ஒரு ஓவியம்! வருவாய் ஆய்வாள் விரல்களின் வித்தை

இது குறித்து கங்காதரன் கூறுகையில், ”எனக்கு கருப்பு நிறத்தில் ஓவியங்கள் வரைவதில்தான் அலாதிப்பிரியம். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது ஓவியம் வரையத் தொடங்கினேன். என் அதிக ஆர்வத்தினால் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பரிசுகளை பெற்றுயிருக்கிறேன். தற்போது நான் எனது பணி நேரத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை ஓவியம் வரைவதில் செலவிடுகிறேன்.

ஓவியத்துடன் வருவாய் ஆய்வாளர்

இந்த கரோனா காலத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் ஒரு ஓவியமாவது வரைந்தால்தான் தூங்கச்செல்வேன். நாளொன்றுக்கு ஒரு படமாவது வரைந்து அதன் மூலம் காட்டுகிறேன். குறிப்பாக எனது குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பும் இருப்பதினால் தான் என்னால் பல்வேறு பரிசுகளை வெல்ல முடிந்தது. பெரும்பாலும் நான் பென்சில், ஸ்கெட்ச் மூலம் தான் ஓவியங்களை வரைந்து வருவேன். தவிர ஆயில் பெயிண்டிங், வாட்டர் பெயிண்டிங் மூலம் வரைவதும் பிடிக்கும்” என்றார்.

இதையும் படிங்க:சமையலறையில் தொங்கவிட்டிருந்த ஓவியம்... 46 கோடி மதிப்பா என அதிர்ச்சியில் மூதாட்டி!

Last Updated : Jun 21, 2020, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details