தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே ரேக்ளா பந்தயம் -  சீறிப்பாய்ந்த காளைகள்

கோவை: பொள்ளச்சி அருகே காங்கேயம் காளை இனங்களை பாதுகாப்பது  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற  ரேக்ளா பந்தயத்தை  ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

rekla _race
rekla _race

By

Published : Feb 3, 2020, 11:03 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குளத்துப்பாளையம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. அழிந்துவரும் நாட்டு இன காங்கேயம் காளைகளை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஜோடி நாட்டு இனக்காளைகள் பங்கேற்றன.

கிராம மக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம்

ரேக்ளா பந்தயத்தில் மாட்டு வண்டியில் பூட்டிய காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்து ஓடின. இதனை சாலையின் இருபுறமும் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். 200 மீட்டர், 300 மீட்டர் என்ற அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் குறைந்த நேரத்தில் நிர்ணயத்த இடத்தை தொட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம், கோப்பைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : குன்னுாரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

ABOUT THE AUTHOR

...view details