தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறந்து பிறந்த யானைக்குட்டி: பாசப்போராட்டம் நடத்தும் யானைக்கூட்டம் - இறந்து பிறந்த யானைக்குட்டி

கோவை: யானைக்குட்டி இறந்தே பிறந்ததை அறியாமல் பத்திற்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக அந்த யானைக்குட்டியை சுற்றிவரும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

pre term elephant death in kovai

By

Published : Sep 20, 2019, 6:28 PM IST

பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட தாடகை நாச்சியம்மன் கோயில் அருகே குறைப்பிரவசத்தால் குட்டியானை ஒன்று இறந்தே பிறந்தது. இதனை அறியாமல் யானைக் கூட்டம் அக்குட்டி யானையை சுற்றி சுற்றி வந்தன. இந்த தகவலையறிந்த தலைமை வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வேட்டைத் தடுப்பு காவலர்கள், கால்நடை உதவி இயக்குநர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் இறந்த குட்டியானையை உடற்கூறாய்வு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுகுறித்து பேசிய காசிலிங்கம், தாய் யானை நலமுடன் உள்ளதென்றும், குட்டி யானையைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சுற்றிக்கொண்டிருப்பதால் யானைக்கு உடற்கூறாய்வு செய்ய கால தாமதம் ஏற்படுவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், இன்று மாலைக்குள் குட்டி யானையின் உடற்கூறாய்வு முடிக்கப்படும் என்றும், இதற்காக யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இதையும் படிக்க: மனிதனை மிஞ்சிய யானையின் பாசம்!

ABOUT THE AUTHOR

...view details