தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை கேட்டு கொடுமை - கோவையில் போஸ்டரால் பரபரப்பு

வரதட்சணை கேட்டு கொடுமை என்று பிரபல பெண் ஜோதிடர் குடும்பத்தினரை குறிப்பிட்டு கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Poster against astrologer family for asking dowry
வரதட்சணை கேட்டு கொடுமை என போஸ்டர்

By

Published : Sep 19, 2020, 9:49 PM IST

2018ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த அன்னபூரணி என்ற பெண்ணுக்கும், கோவை செல்வபுரத்தை சேர்ந்த ரித்தீஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அன்னபூரணி தனது கணவர் ரித்தீஸ், அவரது தந்தை, தாய் ஆகிய மூவரும்தன்னிடம்அதிக வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், தன்னை பெற்றோர் இல்லத்திற்கே அனுப்பிவிட்டதாகவும் கூறியிருந்தார். ரித்தீஸின் தாய் கல்பனா, கோவை நகரின் பிரபலமான ஜோதிடராக உள்ளார்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ரித்தீஸ், அவரது தந்தை, தாய் ஆகிய மூவரின் மீதும் வரதட்சணை கொடுமை பிரிவின்கீழ் வழக்குப்பதிவு (498ஏ, 323, 506) செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து, கோவை செல்வபுரம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் பல கோடி வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், மேற்கூறிய மூவரது பெயர்களும், முகவரியும் குறிப்பிடப்பட்டு, வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகள் இவ்வாறு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அலட்சியமாக சாலையோரம் கொட்டிக் கிடக்கும் கரோனா கிட்டுகள்

ABOUT THE AUTHOR

...view details