தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 4, 2020, 10:44 PM IST

ETV Bharat / state

'கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவினர் எதையும் பேசவில்லை'

கோவை: சட்டப்பேரவையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவினர் எதையும் பேசவில்லை என்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிமுகவினர் களத்தில் நின்று பணியாற்றி வருவதாகவும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

pollachi navamalai trible dmk
pollachi navamalai trible dmk

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாயவிலைக் கடைகளில் ரூ 1,000 மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று பொள்ளாச்சியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ. 1,000 மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட 18ஆவது வார்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதன்பின்னர் பேசிய அவர், "சட்டப்பேரவையில் நடந்த மானிய கோரிக்கையின் போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதிலேயே குறியாக இருந்தார்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவினர் எதையும் பேசவில்லை. ஆனால், தற்போது அதிமுகவினர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: மக்களை எச்சரிக்க ட்ரோன் ஒலிப்பெருக்கி - காவல் துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details