தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2020, 8:46 AM IST

ETV Bharat / state

வங்கிக்கடன், வருமானவரி செலுத்த 6 மாத அவகாசம் கேட்டு கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: சிறு, குறு தொழில் கூடங்கள் வங்கிக் கடன், வருமானவரி செலுத்துவதற்காக ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

petition-to-the-district-collector
petition-to-the-district-collector

தமிழ்நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு தொழில் கூடங்களும் 31ஆம் தேதிவரை மூடப்படுகின்றன. இந்நிலையில், கொடிசியா, கோப்மா, உள்ளிட்ட 13 தொழில் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்கள் அனைத்தும் நலிவடைந்துவரும் நிலையில் கரோனா மேலும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

இதனால் தாங்கள் செலுத்த வேண்டிய வங்கிக்கடன், ஜிஎஸ்டி வருமான வரி போன்றவற்றை செலுத்துவதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறு, குறு தொழில் அமைப்பின் செயலாளர் ஜேம்ஸ், ”இந்த வைரஸ் பாதிப்பினால் சிறு, குறு தொழில்செய்வோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் முடிந்தவரை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூறிய சம்பளமும் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சிறு, குறு தொழில் அமைப்பின் செயலாளர் ஜேம்ஸ்

மேலும், கரோனா பாதிப்பு மார்ச் 31ஆம் தேதிக்கு மேலும் இருந்தால் ஜூன் மாதம் வரையிலும் சிறு, குறு தொழில் கூடங்கள் மூடுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தாங்கள் செலுத்தவேண்டிய ஜிஎஸ்டி வருமான வரி, வங்கிக் கடன் போன்றவற்றை செலுத்துவதற்கு அவகாசம் தர வேண்டியும் ஜூன் மாதத்திற்கு மேல் இவற்றையெல்லாம் கட்டுவதற்கு காலத்தை நீட்டித்துத் தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: திருச்சி மத்திய சிறையில் கைதிகள் விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details