தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகி சரண்!

கோயம்புத்தூர்: பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

periyar statue coimbatore case
periyar statue coimbatore case

By

Published : Jul 17, 2020, 5:17 PM IST

கோயம்புத்தூர், சுந்தராபுரம் பகுதியிலுள்ள பெரியார் சிலை மீது ஜூலை 16ஆம் தேதி நள்ளிரவு காவிச் சாயம் ஊற்றப்பட்டது. அச்சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் குனியமுத்தூர் காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியைத் தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போத்தனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர், இவ்வழக்குத் தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி பெயிண்டை ஊற்றிய சமூக விரோதிகள்!

ABOUT THE AUTHOR

...view details