தமிழ்நாடு

tamil nadu

விடுமுறையிலும் தொடரும் பள்ளி வகுப்புகள்...வரப்பிரசாதம்!

கோயம்புத்தூர்: விடுமுறை நாட்களில் இணையதளம் மூலம் வகுப்புகளை நடத்தி, மாணவர்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றும் பள்ளி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு...

By

Published : Apr 4, 2020, 10:37 AM IST

Published : Apr 4, 2020, 10:37 AM IST

Updated : Apr 4, 2020, 12:38 PM IST

online classes are boon to student
online classes are boon to student

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூகப் பரவலைக் குறைக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், மத்திய, மாநில அரசுகள் உத்தரவு வழங்கியுள்ளன. இதனால், பெரியவர்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்களுடைய பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன்களுடன் நேரத்தைக் கழிப்பது என களத்தில் இறங்கிவிட்டனர்.

வளரும் குழந்தைகள் தங்களுடைய பொன்னான நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியிலுள்ள லிட்டரசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், அங்குப் பயிலும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர். முதல் கட்டமாக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் வழியாக வகுப்பு நடைபெற்றுவருகிறது.

விடுமுறையிலும் தொடரும் பள்ளி வகுப்புகள்

எப்படி? என்னென்ன சொல்லித்தருகிறார்கள்?

ஆசிரியர்கள் அவரவர் வீட்டில் இருந்துகொண்டே இணையதளம் மூலம் மாணவர்களை ஒருங்கிணைக்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை எடுத்துவருகின்றனர். இதனால், விடுமுறையில் மாணவர்களின் கவனம் சிதறாமல் மாணவர்கள் படிக்க முடியும் என அப்பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், " திடீரென அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, மாணவர்கள் பள்ளி வர இயலாமல், வீட்டில் உள்ளனர். தங்களுடையப் பொழுதுபோக்கிற்காக, தொலைக்காட்சி, இணையதளங்கள், செல்போன் விளையாட்டு ஆகியவற்றில் நேரத்தை வீணடித்துவருகின்றனர். இதற்கு மாற்றாக, ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என எண்ணினோம்.

மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்

இதனால், எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தங்களுடைய ஆசிரியர்கள் மூலம் இணையதள வாயிலாக சிறப்பு வகுப்புகளை எடுக்க முடிவு செய்தோம். அதன்படி, ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுடைய பெற்றோரின் அலைபேசிகளின் வாயிலாக இணையத்தில் சிறப்பு வகுப்புகளை எடுத்துவருகின்றனர்.

இதுபோன்றத் திட்டத்தை செயல்படுத்த, முன்பே முயன்றோம். ஆனால், காலச்சூழலால் இதனை செய்ய முடியவில்லை. தற்போது, வாய்ப்பு கிடைத்துள்ளதால் பயன்படுத்திக் கொண்டோம்" என்றார்.

இணைய வழியில் கற்பிக்கப்படும் பாடங்கள்.

இந்த முயற்சியால், பள்ளித் திறக்கும்போது மாணவர்கள் சம்பந்தப்பட்டப் பாடங்களை நினைவில் வைத்திருப்பார்கள். ஆசிரியர்களுக்கும் பாடம் எடுப்பதில் பெரிதாக சிரமம் இருக்காது.

ஆர்வத்துடன் கல்விக் கற்கும் மாணவி.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "வீட்டில் எப்படி பொழுதைக் கழிப்பது என்ற யோசனையில் இருந்த சமயத்தில், இதுபோன்ற சிறப்பு வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாகயிருக்கிறது. பள்ளி திறக்கும்போது இந்தப் பயிற்சி மிகவும் உதவியாகயிருக்கும்" என்றனர்.

வீட்டில் இருந்தப்படியே பாடம் நடத்தும் ஆசிரியர்

மாணவர்கள் அலைபேசியிலும், தொலைக்காட்சிகளிலும் வீணாகக் காலத்தைக் கழிப்பதால், மனச்சோர்வுக்கு ஆளான பெற்றோர், இணையதளம் வழியாக பாடம் கற்பிப்பதை ஊக்குவிக்கின்றனர். மாணவர்களின் வரப்பிரசாதமாக, இந்த வகுப்புகளைக் குறிப்பிடுகின்றனர்.

Last Updated : Apr 4, 2020, 12:38 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details