கோயம்புத்தூர்:இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி தினம் கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கணபதி ஹோமத்தில் சிறப்பு விருந்தினர் பெயர்களில் முதலாவதாக திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடுள்ள மருதமலை சேனாதிபதி, இந்து முன்னணியின் நோட்டீசில் எனது பெயர் அனுமதி இல்லாமல் பதிவிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மருதமலை சேனாதிபதி விளக்கம் இனிமேல் எனது பெயரை எனது அனுமதியில்லாமல் நோட்டீசுகளில் பதிவிட வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சிலை வாங்குவது போல் நடித்து சிலை திருடர்களை பிடித்த காவல்துறையினர்