தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில்ல் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைபுகளின் சார்பாக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணியாக வந்தனர். மேலும், இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பின்பு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பள்ளி வாசல் முன்பு இருந்து 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக சி.ஏ.ஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியபடி வந்தனர்.
இதனையடுத்து பேரணியாக வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 300 மீட்டருக்கு முன்பே , காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்பு, பேரணியாக வந்தவர்கள் சாலையில் அமர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக மத்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். மேலும், இவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
பேரணியில் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இப்போராட்டத்தில் அனைத்து இஸ்லாமிய மக்களும் கலந்துகொண்டனர். கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர்கள் 4 பேர் தலைமையில் 25 உதவி ஆணையர்கள், 55 ஆய்வாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட காவலர்கள், அதிவிரைவுப் படை வீரர்கள் என 1200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும், காவல் துறையினர் 3 ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: சிஏஏவுக்கு எதிராக அம்மாபட்டினத்தில் மக்கள் போராட்டம்