தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் தேர்தல் சோதனை: ரூ.95 லட்சம் ரொக்கம், துப்பாக்கி பறிமுதல்!

கோவை: சுல்தான்பேட்டை பகுதியில் வங்கிப்பணம் எனக்கூறி போதிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.95 லட்சம் ரொக்கம் மற்றும் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

By

Published : Mar 30, 2019, 12:52 PM IST

கோவை

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் வாகனத் தணிக்கை உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரியான சுந்தரராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிப்புதூர் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பாதுகாப்பு சேவை வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், வாகனத்தில் டி.பி.எல். 12 எனும் இரட்டைக்குழல் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாகன ஓட்டுனரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரிடம் துப்பாக்கி கொண்டு செல்வதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், இச்சோதனையில் பிடிபட்ட கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சரவணமுத்து மகன் முருகானந்தம்(43) என்பவரை பறக்கும் படை அதிகாரிகள் சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட துப்பாக்கி

இதேபோல், கோவை சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள பல்லடம் பொள்ளாச்சி சாலையில் மலர்விழி தலைமையில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுல்தான்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு பகுதி முன்பாக பொள்ளாச்சியிலிருந்து வேகமாக வந்த ஒரு வாடகைக் காரை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில், பாலராமஜோதி, சுந்தரேஷ்வரி என்ற பெண் வங்கிஅதிகாரி எனவும், மற்றொருவர் வங்கி உதவியாளர் பிரகாஷ் எனவும் தெரியவந்தது. இருவரும் லட்சுமி விலாஸ் வங்கியின் அடையாள அட்டையையும் காட்டியுள்ளனர். காரின் பின் இருக்கையில் இருந்த இரும்புப்பெட்டியில் வங்கியின் பணம் ரூ.95 லட்சம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பணத்தைக் கொண்டு செல்வதற்கான ஆவணங்களைக் கேட்டபோது அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. மேலும் இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு செல்வதற்கு போதிய காவலர்களும் இல்லாதால் சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள், காருடன் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் நித்திலவள்ளியிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details