தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2021, 1:38 PM IST

ETV Bharat / state

திருப்பூர் வருகைதரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு!

கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் இந்தாண்டு மட்டும் ஒன்றரை லட்சம் வெள்ளாடுகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சொன்ன கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பிப்ரவரி 11, 12இல் திருப்பூர் வருகைதரும் முதலமைச்சருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

pollachi
pollachi

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட நாட்டுக்கல் பாளையம், திப்பம்பட்டி ஊராட்சி, மலையாண்டிபட்டினம் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 1,110 மகளிருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா வெள்ளாடுகளை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் இந்தாண்டு மட்டும் ஒன்றரை லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் கறவைப் பசுக்களும் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் மூன்றரை லட்சம் மகளிருக்கு கோழிகள் வழங்கப்பட்டுள்ளன.

உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு

பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவ்வாறு வரும் முதலமைச்சருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 15 லட்சம் மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details