ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதில் 1400 பேர் வீதம் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இதுபோல கோவையில் தோராயமாக 2 லட்சம் வட மாநில மக்கள் இருந்த நிலையில், 22,000 பேரை அனுப்ப முடிவெடுக்கப்பட்டு அனைவருக்கும் டோக்கன் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை கோவையிலிருந்து 18 சிறப்பு ரயில்கள் சென்ற நிலையில் இன்று பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் செல்ல உள்ளன.
சொந்த ஊருக்கு செல்ல கோவையில் காத்திருக்கும் வட மாநில மக்கள்!
கோவை: சொந்த ஊருக்கு செல்ல டோக்கன் வாங்குவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் 2000-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் அந்த ரயிலுக்கு செல்ல டோக்கன் வாங்குவதற்காக மாவட்ட வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் 2000-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் திரண்டனர். மேலும் அவர்களின் ஆதார் அட்டை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக தினமும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், தகுந்த இடைவெளியை பின்பற்றி வட மாநில மக்கள் அனுப்பப்படுவதால் அதிகப்படியான மக்கள் செல்ல முடியாமல் தினந்தோறும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதையும் படிங்க:வைரஸை செயலிழக்கவைக்கும் யுவி பெட்டி - அசத்திய கோவை மாணவர்கள்