தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலர்களுக்கு நினைவுப்பரிசு!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறப்பாக செயல்பட்ட வனத்துறை அலுவலர்களுக்கு, துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் பதக்கங்களும் சான்றதழ்களும் வழங்கினார்.

By

Published : Nov 3, 2020, 10:56 PM IST

anaimalai-tiger
anaimalai-tiger

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில், அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில் அக்டோபர் மாதம் ரோந்து பணி மேற்கொண்டதற்கான ஆய்வுக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.

அப்போது, சிறப்பாக செயல்பட்ட உலாந்தி வனச்சரகம், வரகளியார் சுற்று பணியாளர்களுக்கு துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் பதக்கங்கள், சான்றதழ்கள் மற்றும் சுழற்கோப்பை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து வால்பாறை தன்னார்வலர்கள் (NCF) ஆனந்தகுமார் மற்றும் கணேஷ் ரகுராம் ஆகியயோர் வனப் பணியாளர்களுக்கு மனித-வன உயிரின எதிர்கொள்ளல் குறித்து பயிற்சி வழங்கிய தன்னார்வு தொண்டு நிறுவனத்துக்கு (NCF) நினைவு பரிசையும், உலாந்தி மற்றும் பொள்ளாச்சி வனச்சரகங்களில் பணியாற்றி வரும் முதல்நிலைப் பணியாளர்களுக்கு குளிர் காலத்திற்கு தேவையான உடைகளையும் வழங்கினர்.

பயிற்சி வனப்பழகுடியினர் 14 பேருக்கு 18 மாத பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆணைகளை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வழங்கி பணியாளர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும், 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் வன உதவி பாதுகாவர் செல்வம், நேர்முக உதவியாளர் முரளிதரன், வனச்சரகர்கள் மணிகண்டன், ஜெயசந்திரன், நவீன், மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details