கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்துகொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (35) என்பவருடன் நட்பு ஏற்படுள்ளது.
அருணும் அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வந்து பழகியுள்ளார். இந்நிலையில் மார்ச் 4ஆம் தேதி குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குமாரின் மகளுக்கு அருண்குமார்பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்பு, இதனை வெளியே சொல்லக் கூடாதெனவும் மிரட்டியுள்ளார்.