தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2021, 9:19 PM IST

ETV Bharat / state

ரயில் மோதி படுகாயம் அடைந்த ஆண் யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை!

கோயம்புத்தூர்: நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயமடைந்த ஆண் காட்டு யானைக்கு சாடிவயல் யானை முகாமில் இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.

Male elephant
Male elephant

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள சின்னாம்பதி, நவக்கரை ஆகிய கிராமங்கள் தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ளன. வனப்பகுதியான இங்கு ஏராளமான யானைகள் வாளையாறு ஆற்றில் நீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் இரண்டு ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து நீர் அருந்த செல்லும்.

அதேபோல், நேற்று (மார்ச் 15) அதிகாலை 1.30 மணி அளவில் யானைக் கூட்டம் ஒன்று ஆற்றில் நீர் அருந்த வந்துள்ளது. அப்போது, அந்த வழியாக வந்த திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் ஆண் காட்டு யானை ஒன்றின் மீது மோதியது.

ஆண் யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை

இதில் தலை, இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த யானை அங்கேயே படுத்தது. இதையடுத்து அங்கு கால்நடை மருத்துவர்கள் குழுவோடு வந்த வனத்துறையினர் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்து சாடிவயல் கும்மி யானை முகாமிற்கு மாற்றம் செய்தனர். தொடர்ந்து தர்பூசணி, வெள்ளம், தண்ணீரை உணவாக கொடுத்துள்ளனர். மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

யானையின் பின்னங்கால் அசைக்க முடியாத நிலையில் உள்ளதால் காலில் எழும்பு முறிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய சிறப்பு எக்ஸ்ரே மிசின் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகளை வைத்து யானைக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இகையும் படிங்க: காட்டில் மாடு மேய்க்கச் சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details