தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமான ஒரு இடம் கோயம்புத்தூரில் உள்ள வால்பாறை. இங்கு, வெளி மாநில, வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்வர். இந்தப் பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது.
இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்துவருகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இஞ்சி பாறை பகுதிகளில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வளர்க்கும் மாடுகளை, சிறுத்தைகள் அடித்துக் கொன்றன.
மேலும், மக்கள் அதிகம் வசிக்கும் வால்பாறை புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் சிறுத்தை உலா வருவது காவல் துறையினர் பொருத்தியா கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. உணவு தேடி ஊருக்குள் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சாலையில் திரியும் சிறுத்தை இது குறித்து அப்பகுதி வனத் துறையினர் கூறுகையில், "காவல் துறையினர் பொதுமக்களின் நலன் கருதி சுழற்சி முறையில் தினம்தோறும் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வனவிலங்குகளின் பசியைப் போக்க, காட்டுக்குள் அதற்கேற்ற உணவுகளை ஏற்பாடு செய்துவருகின்றோம்" என்று கூறினர்.
இதையும் படிங்க: 'உலகத்தைத் தனதாக்கும் குறுகிய மனப்பான்மையை மனிதன் கைவிட வேண்டும்'