தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவு கேட்டு கூடிய தொழிலாளர்கள் மீது தடியடி!

கோவை: சுந்தராபுரம் அருகே தினக்கூலி பணிக்குச்செல்லும் வட மாநில தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் உணவு வழங்கக் கோரி சாலையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

latti charge on north indian labours those protest for food
உணவு கேட்டு கூடிய தொழிலாளர்கள் மீது தடியடி

By

Published : Mar 28, 2020, 4:16 PM IST

கரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது, தேவையின்றி பொது இடத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார், உத்திரப் பிரதேச மாநிலங்களிலிருந்து கோவைக்கு கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வந்துள்ள தொழிலாளர்கள் வேலையின்றி ஊதியம் கிடைக்காததால் உணவின்றி தவிப்பதாகவும், அரசு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சுந்தராபுரம் காமராஜ்நகரில் 100 க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உணவு கேட்டு கூடிய தொழிலாளர்கள் மீது தடியடி

தகவலறிந்து அங்கு வந்த தெற்கு உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல் தலைமையிலான காவலர்கள் வட மாநில தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து உதவி ஆணையர், உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இருந்தும் அவர்கள் கலைய மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து அவர்கள் தங்கி உள்ள பகுதிகளுக்கு சென்ற போலீஸார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினர். இனி வரும் நாட்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details