தமிழ்நாடு

tamil nadu

காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினருக்குப் 2ஆம் நாளாக பயிற்சி

By

Published : Feb 21, 2020, 2:15 PM IST

கோவை: அட்டக்கட்டியில் காட்டுத்தீயை எதிர்கொள்வது குறித்து வனத்துறையினருக்கு இரண்டாம் நாளாக செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

kovai-at-attakatti-forest-officers-gets-practical-training-on-controlling-forest-fire
காட்டுத் தீயைணைக்க வனத்துறையினருக்கு பயிற்சி!

கோவை மாவட்டம் வால்பாறை அட்டக்கட்டியில் உள்ள வனத்துறை பயிற்சி மையத்தில், பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டங்களைச் சேர்ந்த வனத்துறை பணியாளர்களுக்கு கோடைக்காலத்தில் வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை எதிர்கொள்வது குறித்து செயல்விளக்க பயிற்சி முகாம் ஒரு வாரம் நடைபெறுகிறது.

பயிற்சி முகாமை ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் நேற்று முன்தினம் (பிப்.19) தொடங்கிவைத்தார். உதவி வனக்காப்பாளர் செல்வம், உயிரியலாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி, வனச்சரகர் நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டாம் நாளான நேற்று வனச்சரக அலுவலர்கள், வனவர், வனக்காப்பாளர் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் எதிர்பாராத விதமாக ஏற்படும் காட்டுத்தீயை குறைந்த பட்ச உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு எதிர்கொண்டு அணைப்பது, காட்டுத்தீ பெரியளவில் பரவாமல் தடுக்க எதிர்த் தீயினை உருவாக்குவது, தீத்தடுப்புக் கோடுகளுக்கு அருகில் பாதைகள் உருவாக்குதல், சிறிய அளவிலான தீத்தடுப்பு உபகரணங்களை கையாளுவது ஆகியவை குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

சிறிய வகை தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்தி தீ அணைப்பது குறித்து வனத்துறை பணியாளர்களுக்கு பொள்ளாச்சி தீயணைப்புத் துறையினர் பயிற்சி அளித்தனர்.

காட்டுத் தீயைணைக்க வனத்துறையினருக்கு பயிற்சி!

இதையும் படிங்க:ராஜஸ்தானின் பத்ரா காடுகளில் கிடுகிடுவென பரவும் காட்டுத் தீ

ABOUT THE AUTHOR

...view details