கோயம்புத்தூர் :உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதனுக்கு கோவை பார் அசோசியேசன் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நேற்று(ஜுலை 15) நடைபெற்றது. இதில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோவை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நீதிபதியைப் பாராட்டிப் பேசினர்.
பின்னர் நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நீதிபதி விஸ்வநாதன், ''நான் தமிழர் தான். தாய் மொழி தமிழ் தான். தமிழகத்தில் தான் படித்தேன். எந்த சந்தேகமும் வேண்டாம். உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற பதவியின் அடிப்படையில் இங்கு நான் பேச வரவில்லை. நான் கோவையைச் சேர்ந்தவன். நான் கோவையை விட்டுச்சென்று இருக்கலாம். ஆனால், என்னுடைய மனதிலிருந்து கோவை விலகவில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதி என்பதை பதவியாக காணவில்லை. ஒரு பொறுப்பாக கருதுகிறேன்.
சிறு வயதிலிருந்தே வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஈர்ப்பு எனக்கு இருந்தது. என் தந்தைக்கு என்னைவிட கூடுதலாகவே விருப்பம் இருந்தது. பள்ளிப் பருவத்தில், மாறுவேடப் போட்டியில் கூட வழக்கறிஞர் வேடம் போட்டுக்கொண்டு தான் சென்று இருக்கிறேன். அப்போது எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதற்கு பிளாஸ்டிக் கோப்பை கொடுத்தார்கள். பொள்ளாச்சி கமலா ஸ்டோரில் வாங்கியிருப்பார்கள் போல'' என நகைச்சுவையாக என் தந்தை தெரிவித்தார்.
இதையும் படிங்க :ஜெருசலேம் புனித யாத்திரைக்கு கூடுதலானோர் பயணிக்க முதல்வர் நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
கோவை வழக்கறிஞர் சங்கம் நான் நீதிபதியாக உதவியது. சட்டத்தின் மீதான ஆர்வம், ஆரம்ப காலத்தில் இருந்தது. முதல் இரண்டு வருடங்கள் ஏற்படாவிட்டாலும், மெல்ல மெல்ல ஏற்பட்டது. கோவை குடிமகனாக இங்கு வந்து பேசி வருகிறேன். என் வாழ்க்கையில் பல தடவை விதி விளையாடியுள்ளது. அதில் விதியின் விளையாட்டு 1 பார்த்தீங்கண்ணா... பந்தய சாலையில் வழக்கமாக சாரதாம்பாள் கோவிலுக்குச் செல்வேன். அதற்கு எதிரே உள்ள டெக்ஸ்டல் லைப்ரரி போவன். ஏ.சி.க்காகவே நூலகத்திற்குச் செல்வேன். அப்போது ஏ.சி. புதிதாக வந்த காலம். அங்கு நீதித்துறை குறித்த புத்தகங்கள் இருந்தது. அதைப்படிக்கும் பொது டெல்லி சென்று வாதிடல்லாம் என்ற எண்ணங்கள் தோன்றியது.