தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை பட்டறை ஊழியரை மிரட்டி நகைகளை பறித்த இருவர் கைது!

கோவை: நகை பட்டறை ஊழியரை மிரட்டி ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்த இரண்டு கொள்ளையர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Coimbatore
jewelry theft two persons arrest

By

Published : Dec 10, 2019, 11:03 AM IST

கோவை காந்தி பூங்கா பொண்ணையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்குச் சொந்தமான நகை பட்டறை அசோக் நகர் சுப்பையா லே-அவுட்டில் உள்ளது. இங்கு செல்வபுரத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், அவரது அண்ணன் பிரவீன் ஆகியோர் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர்.

சம்பவத்தன்று செய்து முடிக்கப்பட்ட 100 கிராம் எடை கொண்ட ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஜெயப்பிரகாஷ் ஒரு பையில் எடுத்து உரிமையாளர் செல்வராஜிடம் கொடுக்க அவரது வீட்டுக்கு சைக்கிளில் பொண்ணையராஜபுரம் சென்றார்.

வீட்டுக்கு அருகில் செல்லும்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த இரண்டு பேர் ஜெய்பிரகாஷை அழைத்து ’’நாங்கள் இருவரும் உனது அண்ணன் பிரவீனுடன் ஒரே பள்ளியில் படித்து உள்ளோம்’’ என கூறி பேச்சு கொடுத்தனர். பின்னர் ஜெயப்பிரகாஷின் செல்போனை வாங்கிக் கொண்டு, கையில் வைத்திருப்பது என்ன எனக் கேட்டுள்ளனர். அதற்கு ஜெயபிரகாஷ் பட்டறையில் செய்த நகைகளை உரிமையாளர்களிடம் கொடுக்க வைத்திருப்பதாக கூறினார்.

பின்னர் நகையை கொடுக்குமாறு இருவரும் கேட்டுள்ளனர். இதற்கு ஜெயப்பிரகாஷ் மறுக்கவே கொலை செய்துவிடுவோம் என அவரை மிரட்டி நகையை பறித்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார்.

மேலும் பிரவீனிடம் இது குறித்து விசாரித்ததில் ஆலாந்துறை அருகே உள்ள ஜாகிர் நாயக் பாளையத்தைச் சேர்ந்த கலையரசன், செல்வபுரம் வடக்கு ஹவுசிங் சேர்ந்த தவ்பிக் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவர் மீதும் செல்வபுரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு ஒன்று இருப்பதும் தெரியவந்தது.

இதையும் படிக்க: 'விண்வெளியில் தொடங்கியாச்சு ஹோட்டல்' - குடியேறப் போறது யாருனு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details