தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தள்ளுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!

கோவை: ஆடம்பரமாக வருபவர்களுக்கு மத்தியில் எளிமையாக தள்ளுவண்டியில் வந்து நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் மிகுந்த கவனத்தை பெற்றார்.

By

Published : Mar 19, 2019, 10:53 PM IST

தள்ளுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சே வேட்பாளர்!

கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது. இவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, தள்ளுவண்டியில் தனது ஆதரவாளர்களை அமர வைத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வண்டியை இழுத்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதுவரை 29 முறை பல்வேறு தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். குதிரை , மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து, இதுபோன்று வித்தியாசமாக வேட்புமனுவை தாக்கல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தள்ளுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சே வேட்பாளர்!

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள், புதிது புதிதான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்கள்களை தன் பக்கம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு ஒவ்வொரு முறையும் நூதனமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருப்பது அனைவரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details