தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்திரவின்படி பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் கரோனா வைரஸ் ஒழிப்பு, தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஓவியப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் கலந்துகொண்டு ஓவியங்களை வரைந்தனர்.
பொள்ளாச்சியில் கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
கோவை: பொள்ளாச்சியில் தீயணைப்புத் துறை சார்பாக நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சியில் கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி: 50 மேற்ப்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!
இந்த ஓவியப் போட்டியில் ஆறு வயது முதல் 10 வயது வரை ஒரு பிரிவாகவும், 11 வயது முதல் 16 வயது வரை மற்றொரு பிரிவாகவும் இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் பரிசு வழங்கினார். மேலும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க...கோமதி மாரிமுத்துவுக்கு நான்கு ஆண்டுகள் தடை!