தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2020, 1:55 AM IST

ETV Bharat / state

'அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்' - இந்து மக்கள் கட்சி!

கோயம்புத்தூர்: அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.

'அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்'- இந்து மக்கள் கட்சி!
Coimbatore hindu makkal katchi

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்து முன்னணி, பாரத் சேனா, சக்தி சேனா உள்ளிட்ட 12 இந்து அமைப்புகள் கலந்து கொண்டன.

இது குறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் கூறியதாவது, "விநாயகர் சதுர்த்தி விழா நடத்த விதிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் தமிழ்நாடு அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உரிய பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தியை நடத்திக்கொள்ள அரசு அனுமதியளிக்க வேண்டும்.

மேலும், எங்களது மனுவை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இம்முறை விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு, வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்படுத்தி விழாவை நடத்திக் கொள்ள அனுமதி தரவேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு அரசு கூறிய தடைகளை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details