தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 16 அடி ராஜநாக பாம்பை மீட்ட வனத்துறையினர்!

கோவை : தங்களது வனச்சரக பகுதிக்கு உள்பட்ட பாடவயல் என்ற கிராமத்திலிருந்து 16 அடி ராஜநாகப் பாம்பை மீட்ட வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் அதனை எடுத்துச் சென்று விட்டனர்.

Foresters rescue snake as kingcobra
Foresters rescue snake as kingcobra

By

Published : Nov 6, 2020, 7:08 PM IST

தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. இதனால் மலையோரப் பகுதிகளில் பூச்சிகள், ஊர்வன, விலங்குகள் உள்ளிட்ட பிற உயிருனங்கள் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (நவ.06) பெய்த கன மழையில் பாடவயல் என்ற கிராமத்தில் 16 அடி நீளமும் 20 கிலோ எடையும் கொண்ட கருப்பு நிற ராஜநாக பாம்பு ஒன்று மழையில் அடித்து ஊர் பகுதிக்குள் வந்து சேர்ந்தது. அந்தப் பாம்பு இரையை விழுங்கி இருந்த நிலையில், வேகமாக நகர முடியாமல் சாலையோரம் கிடந்துள்ளது.

மீட்கப்பட்ட ராஜநாகம்

இந்நிலையில், அதனைப் கண்ட அப்பகுதி மக்கள், முக்காளி வனசரக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதையும் படிங்க: மளிகை கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை - மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details