தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனிப்பொழிவு காரணமாக பூ விலை உயர்வு: பொதுமக்கள் கவலை

கோவை: கடந்த சில நாள்களாகவே பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் பூவின் வரத்து குறைந்து அதிக விலையில் விற்கப்படுவதால் பூவை வாங்க வரும் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Flowers rise due to snowfall
Flowers rise due to snowfall

By

Published : Jan 15, 2020, 8:01 AM IST

கோவை பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூபாய் 3000-க்கும் மேல் விற்கப்படுவதால் மக்கள் பூவை வாங்கவே தயக்கம் காட்டுகிறார்கள். சாதாரணமாக 1000 லிருந்து 1500 ரூபாய்வரை விற்கப்படும் மல்லிகைப் பூ தற்போது 3000-க்கும் மேல் விற்கப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்

அதனால் மல்லிகைப் பூவிற்குப் பதிலாகக் காக்கடா எனப்படும் பூவை வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும் இப்பூவினுடைய விலையும் கிலோ 1,200 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் பூவை வாங்கவே அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதைப் பற்றி பூக்கடை வியாபாரிகள் கூறுகையில், "கடந்தாண்டைவிட இந்தாண்டு பனிப்பொழிவின் காரணமாக பூ வாடி, வரத்து குறைவு என்றாலும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலானோர் மல்லிகைப் பூவிற்கு பதிலாகக் காக்கடா பூவை வாங்கிச் செல்கின்றனர்.

பூவை வாங்க வரும் மக்கள் பூவின் விலை மிகவும் உயர்ந்துள்ளது என்றும் அதிலும் தாங்கள் விரும்பி வாங்கும் மல்லிகைப் பூவின் விலை மிகவும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அதற்கு மாற்றாகக் காக்கடா பூ வாங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்" என்றனர்.

பனிப்பொழிவு காரணமாக பூவின் விலை உயர்வு

ஆனால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்விதமாக கடந்தாண்டைவிட இந்த ஆண்டு கரும்பின் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜோடி 200 ரூபாய்வரை விற்ற கரும்புகள் தற்பொழுது ஜோடி 80 லிருந்து 150 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய புதிய ரக நெல் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details