தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் அடிப்படை செய்து தரக்கோரி வியாபாரிகள் சாலை மறியல்!

கோவை: அண்ணா ;சந்தைப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல்
மறியல்

By

Published : Sep 4, 2020, 8:24 AM IST

கரோனா காரணமாக பல்வேறு இடங்களில் செயல்பட்டுவந்த காய்கறிச் சந்தைகள் வேறு இடங்களுக்குச் சிறிது சிறிதாக மாற்றப்பட்டது.

அதல் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா கோவில் பகுதியில் செயல்பட்டுவந்த அண்ணா சந்தையும் வேறு பகுதிக்கு மாற்றப்பட உத்தரவிடப்பட்டது.

அதன்படி, தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு 400-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் மாற்றப்பட்டன.

கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருவதால் சந்தை நடைபெற்றுவந்த சுமார் ஒரு ஏக்கர் நிலம் தற்போது சேறும் சகதியுமாக மாறியுள்ளது. சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனைச் சரிசெய்யக்கோரி பலமுறை அரசு அலுவலர்களிடம் கோரிக்கைவைத்த நிலையில் இன்றுவரை சரிசெய்யப்படாததால் அங்கிருந்த வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீண்ட நாள்களாகவே அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்துதரவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர். சம்பவ இடத்திற்குச் சென்ற சாய்பாபா காலனி காவல் துறையினர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதனைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் போக்குவரத்து தடையானது.

ABOUT THE AUTHOR

...view details