தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2020, 1:44 AM IST

ETV Bharat / state

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு!

கோவை: இந்து கடவுள்களை அவதூறாக பேசியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Farmers, BJP petition at Coimbatore District Collector's Office!

கருப்பன் என்ற யூடியூப் சேனலில் இந்து கடவுள்களை தவறாக பேசிய முகமது ஆசிப் கானை கைது செய்யக்கோரி பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கருப்பன் என்ற யூடியூப் சேனலில் இரு தினங்களுக்கு முன்பு முகமது ஆசிப் கான் என்பவர், இந்து மத கடவுளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி இருப்பதாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் அந்த யூடியூப் சேனலின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதேபோல் இந்து மதத்தை யார் இழிவுpபடுத்தி பேசினாலும் பாஜகவினர் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கரோனா ஊரடங்கு நேரத்தில் வேளாண் விளைபொருLகளை கொண்டுசெல்ல விவசியிகளுக்கு இ-பாஸ் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அவர்களது மனுவில், விளைநிலங்களில் விளைவிக்கப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு விவசாயிகள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், அதற்கு உரிய பாஸ் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். விளைவிக்கப்பட்ட காய்கறிகளை அண்டை மாவட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாததால் பெரும்பாலான காய்கறிகள் அழுகி வீணாகி போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் விவசாய தொழிலுக்கு வரும் பல கூலித் தொழிலாளிகள் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து வருபவர்களாக இருப்பதனால், அவர்களுக்கும் உடனடியாக இ பாஸ் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details