கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கொப்பரை தேங்காய் விலையும் குறைந்துகொண்டே வருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகேவுள்ள வாழைக்கொம்பு நாகூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சம்பத்குமார் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியில் இருந்த அவர் தென்னை மரம் வளர்வதற்காக பயன்படுத்தப்படும் மாத்திரையை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.