தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2019, 5:55 PM IST

ETV Bharat / state

மேற்குமண்டலத்தை பாலியல் அபாயமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும்: எவிடன்ஸ் கதிர் வலியுறுத்தல்

கோவை: தமிழ்நாட்டின் மேற்கு மண்டல பகுதிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதால், அப்பகுதியை பாலியல் அபாயமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர் வலியுறுத்தியுள்ளார்.

எவிடன்ஸ் கதிர்

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

"தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள காவல்துறை பெண் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைத்திட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுமி விவகாரத்தில் விழிப்புணர்வு அதிகளவில் வெளிப்படவில்லை என்பது வேதனையாக உள்ளது. சிறுமியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யவில்லை. இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், ஒரு மருத்துவர் மட்டுமே பிரேத பரிசோதனை செய்துள்ளார். இறந்த சிறுமி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரம் அதிக அளவில் வெளியே பேசப்படவில்லை. மேற்கு மண்டல பகுதிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதியை பாலியல் அபாயமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதனிடையே சிறுமி கொலை வழக்கில் நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details