தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவக் கனவை விட்ட மாணவிக்கு கிடைத்த உதவிக்கரம்!

கோவை: சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியாமல் போன மாணவி குறித்து, நமது ஈடிவி பாரத் செய்தி வெளியானதையடுத்து, தற்போது மாணவிக்கு உதவிக்கரம் கிடைத்துள்ளது.

சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவ கனவை விட்ட மாணவி கிடைத்த உதவிக்கரம்: ஈடிவி பாரத்தின் நன்றி!
சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவ கனவை விட்ட மாணவி கிடைத்த உதவிக்கரம்: ஈடிவி பாரத்தின் நன்றி!

By

Published : May 14, 2020, 6:06 PM IST

Updated : May 14, 2020, 7:42 PM IST

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் அருகே உள்ள ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியில் மலசர் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுவது பற்றியும், சங்கவி என்ற பழங்குடியின மாணவிக்குச் சாதி சான்றிதழ் இல்லாததால், மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை குறித்தும், நமது ஈடிவி பாரத்தில், கடந்த 11ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவக் கனவை விட்ட மாணவிக்கு கிடைத்த உதவிக்கரம்!

இந்தச் செய்தியை அடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி சம்பந்தப்பட்ட பழங்குடியினர் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மதுக்கரை துணை வட்டாட்சியர் கருணாநிதி தலைமையில், அலுவலர்கள் ரொட்டி கவுண்டன்புதூர் கிராமத்துக்குச் சென்று பழங்குடியின மக்களிடம் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அக்கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்குக் குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆதார் கார்டு போன்றவை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வழங்கினர். தொடர்ந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டதோடு, விரைவில் அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, சாலை வசதிக்கான ஏற்பாடு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கழிப்பறை திறக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.

பிரசாந்த் உத்தமன், இந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்க இயக்குனர்

இந்நிலையில் மாணவி சங்கவி குறித்து அறிந்த இந்துஸ்தான் சாரணர், சாரணியர் இயக்கத்தின் சார்பில், மாணவி சங்கவியை நேரில் சந்தித்த அதன் முதன்மை இயக்குனர் பிரசாந்த் உத்தமன், மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாயை உதவி தொகையாக வழங்கினார்.

தொடர்ந்து நீட் பயிற்சி மற்றும் மருத்துவ படிப்புக்கான செலவையும் இந்துஸ்தான் சாரண, சாரணியர் இயக்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்தார்.

சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவக் கனவை விட்ட மாணவிக்கு கிடைத்த உதவிக்கரம்!

இது குறித்து மாணவி சங்கவி கூறுகையில், தங்கள் கிராமம் குறித்து செய்தி வெளியானதால், இந்த உதவிகள் தனக்கு கிடைத்ததாகவும், இதற்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

இதையும் படிங்க...சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவப் படிப்பை தொடர முடியாத பழங்குடி மாணவி!

Last Updated : May 14, 2020, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details