தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 5, 2019, 9:01 AM IST

ETV Bharat / state

காலில் கட்டி: குட்டி யானையை காப்பாற்ற மக்கள் கோரிக்கை

கோவை: வால்பாறையில் காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானையை காப்பாற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Elephants Camp at Valparai, Coimbatore, காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானையை காப்பாற்ற பொது மக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது வால்பாறை நல்லமுடி தேயிலை தோட்டம். இங்குள்ள தேயிலை தோட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்க முடியாமல் தவித்துவருகின்றனர். தேயிலை தோட்ட நிர்வாகம் காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தது. ஆனால் பல மணி நேர போராட்டத்திற்குப்பின் இரண்டு காட்டு யானைகளை தவிர மற்ற காட்டு யானைகளை மட்டுமே வனப்பகுதிக்குள் அனுப்பமுடிந்தது.

Elephants Camp at Valparai, Coimbatore, காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானையை காப்பாற்ற பொது மக்கள் கோரிக்கை

தேயிலை தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை மற்றும் அதன் இரண்டு வயது குட்டியை கண்காணித்தபோது குட்டி யானையின் காலில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால்தான் அந்த இரண்டு யானைகள் அங்கிருந்து செல்லவில்லை என்பது தெரியவந்தது. கடந்த பத்து நாட்களுக்கு மேல் அந்த யானை, குட்டியுடன் அப்பகுதியிலேயே இருப்பதால் கொழுந்து பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானைக்கு உடனடியாக வனத்துறையினர் திவீர சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டுமென பொதுமக்களும், வன உயிரின செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிணற்றுக்குள் விழுந்த யானையை போராடி மீட்ட வனத்துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details