கோயம்புத்தூர் தமிழ்நாடு வனக்கல்லூரி வளாகத்தில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் உடனான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் தேபாசிஸ் ஜனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வனம் காப்பது குறித்தும், மனித, மிருக மோதல் அதனை தடுக்க மேற்கொள்ளவேண்டிய பணிகள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவடட வன அலுவலர் வெங்கடேஷ் ஈடிவி பாரத்திற்காக பிரேத்யக பேட்டியளித்தார். இதில், கோவையில் மனித, மிருக மோதலை கட்டுப்படுத்தும் வகையில் இன்ட்ரா நெட் தொழில்நுட்பத்தில் அதிநவீன கேமராவை பொருத்தப்பட இருக்கிறது. இங்குள்ள ஏழு வனச்சரகங்களில் யானை நடமாட்டம் அதிகம் உள்ள வன பகுதியில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இந்த கேமராக்கள் செயல்படும்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்த கேமராக்கள் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் பட்சத்தில் 600 மீட்டர் தொலைவிற்கு முன்பே அதனை படமெடுத்து அனுப்பும். அத்துடன் யானை வருவது குறித்து சத்தம் எழுப்பும் வகையில் இதற்கு கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட இருக்கிறோம். இதற்காக ஒவ்வொரு வனக் கோட்டத்தில் அதற்கான தனித்தனி கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு பணியாளர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.
இதனை ரயில்வே தண்டவாளத்தில் சோதனை முறையில் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். 7.24 கோடி ரூபாய் செலவில் இந்த சோதனை முயற்சியானது செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் யானை நடமாட்டம் அதிகமுள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த கேமரா பொருத்தப்பட்டு ஊருக்குள் வருவதற்கு முன்பே யானையை விரட்ட இந்த அதிநவீன கேமரா பயன்படும் என்றும் அவர் கூறினார்.