தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரம்: குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கிராம நிர்வாக அலுவலக உதவியாளரை காலில் விழ வைத்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

vao assistant apologize issue
மாவட்ட ஆட்சியர் சமீரன்

By

Published : Aug 8, 2021, 12:13 PM IST

Updated : Aug 8, 2021, 2:14 PM IST

கோயம்புத்தூர்:அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம உதவியாளர் முத்துசாமியை கோபால்சாமி என்பவர் காலில் விழ வைத்த விவகாரம் பெரும் கண்டத்திற்குள்ளானது.

இந்நிலையில் கோபிநாத் என்று அழைக்கப்படும் கோபாலசாமி பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி நிர்வாக அலுவலர் கலைச்செல்வி புகார் அளித்தார். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தின் உதவியாளரை காலில் விழ வைத்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெண் அலுவலரைத் தப்பா பேசாதீங்க - அறிவுறுத்திய கிராம உதவியாளரை காலில் விழவைத்த கொடுமை!

அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தது.

மாவட்ட ஆட்சியர் சமீரன்

அந்த அறிக்கையில்,’’முத்துசாமியை கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து கோபால் சாமி தாக்கியதற்கான நேரடி சாட்சிகள் இல்லை. அதே சமயம் முத்துசாமி காலில் விழுந்தது உறுதியானது.

கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட விவகாரத்தில் நடவடிக்கை

இதையும் படிங்க:காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பம்: பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த அவலம்!

Last Updated : Aug 8, 2021, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details