தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்புத்தூர்: காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை பெற கோயம்புத்தூரில் 19 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

By

Published : May 12, 2021, 12:34 PM IST

Corona treatment
Corona treatment

கோயம்புத்தூர்: கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிகமாக செலவீனங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி, கோயம்புத்தூரில் 19 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனைகள் பின்வருமாறு:

  1. அபிநந்த் மருத்துவமனை
  2. சத்தியா மெடிக்கல் சென்டர்
  3. எம்.ஜி.ஹால்பிடல்
  4. சி.எஸ்.ஆர்.நர்ஸிங் ஹோம்
  5. கொங்குநாடு மருத்துவமனை
  6. கல்பனா மெடிக்கல் சென்டர்
  7. பி.எம்.எஸ்.மருத்துவமனை
  8. ஸ்ரீ அபிராமி மருத்துவமனை
  9. கே.ஜி. மருத்துவமனை
  10. இந்துஸ்தான் மருத்துவமனை
  11. கற்பகம் ஹாஸ்பிடல்
  12. ஒன்.கேர்.மெடிக்கல் சென்டர்
  13. ஜி.குப்புசாமி நாயுடு மெமோரியல் மருத்துவமனை
  14. ஜெம் மருத்துவமனை
  15. ஸ்ரீ ராமகிருஷா மருத்துவமனை
  16. ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
  17. ஸ்ரீ லட்சுமி மருத்துவமனை
  18. என்.எம்.மருத்துவமனை
  19. கோயம்புத்தூர் மெடிக்கல் சென்டர்

இங்கு மிதமான தொற்றுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு நிறுவனம் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும். தீவிர தொற்று உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் காப்பீட்டு நிறுவனம் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும்.

மருத்துவ சிகிச்சை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 18004253993,www.cmchistn.com என்ற இணையதள முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details