தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 5, 2021, 1:45 AM IST

ETV Bharat / state

நோயாளிக்கு மதிய உணவு வழங்காத மருத்துவமனை - சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்

வால்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிக்கு மதிய உணவு வழங்காததால் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Covai people protest against hospital
Covai people protest against hospital

கோயம்புத்தூர்: மாணிக்க. என். சி.யை சேர்ந்தவர் மாரியாயி ( 85 ).இவர் கடந்த 5 நாள்களுக்கு முன்பாக வால்பாறை மருத்துவமனையில் கரோனா நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனை மருத்துவர், அலுவலர்கள் மதிய உணவு வழங்கப்படாததால். மாரியாயி மகன், உறவினர்களிடம் கைபேசியில் தெரியப்படுத்தி அழுதுள்ளார்.

இதனையறிந்த அவருடைய மகன், நாம் தமிழர் சக கட்சியினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு தலைமை மருத்துவரை அழைத்தும் வராததால். தொலைபேசியில் அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரமாகியும் மருத்துவர் வராததால் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி முஜீப் கிராம அலுவலர் விஜய் அமிர்தராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர் சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிடவைத்தனர். இதையடுத்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details