கோவை மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்று அதிகாலையில் அலுவலர்கள் ஆம்னி பேருந்துகளில் சோதனைநடத்தினர்.
அப்போது, பெங்களூருவிலிருந்து கோவை வந்த நம்பர் ஒன் என்ற ஆம்னி பேருந்தில் சோதனை நடத்தியபோது, பேருந்தின் மேல் மூன்று மூட்டை குட்கா பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மூட்டைகளிலிருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், கடத்திவர பயன்படுத்திய ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஆம்னி பேருந்து ஓட்டுநர், உரிமையாளரை அலுவலர்கள் தேடிவருகின்றனர்.
ஆம்னி பேருந்தில் குட்கா பறிமுதல் ஏற்கனவே, ஒருமுறை குட்கா கடத்தியதாக நம்பர் ஒன் டிராவல்ஸ் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது இந்நிறுவன பேருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இரண்டாவது முறையாகும்.