தமிழ்நாடு

tamil nadu

ஊனமுற்ற மகளின் சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் தந்தை - உதவி கேட்டு அரசிடம் கோரிக்கை

By

Published : Jul 10, 2020, 12:33 AM IST

கோவை: ஊனமுற்ற மகளின் சிகிச்சைக்கு உதவுமாறு அரசிடம் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

மகளின் சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் தந்தை
மகளின் சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் தந்தை

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் யூசப். சமையல் கலைஞர். இவருக்கு இரு மகள்கள் ஒரு மகன் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

மகன் 10ஆம் வகுப்பு படிக்கிறார். இவரது இளைய மகள் அஷ்னாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் கை கால் இயங்காமல் போனது. வாய் பேசவும் இயலாமல் போனது. இந்நிலையில் அவர் அரசிடம் உதவி நாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, "அஷ்னாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. போதிய பணம் இல்லாததால் தற்போது சிகிச்சை அளிக்க முடியவில்லை. கரோனா ஊரடங்கால் நானும் வேலையில்லாமல் இருப்பதால் கடுமையாக வறுமையில் உள்ளோம். பிசியோதெரபி செய்ய ஒரு நாளுக்கு 350 செலவாகிறது. ஆகவே அரசு உதவிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தைப் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details