கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதி உலியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கோவிட்-19 உலகையே அச்சுறுத்தி வருகிறது. நாம் உண்ணும் உணவிலிருந்து அனைத்திற்கும் மக்கள் அச்சப்பட்டே வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான வதந்திகளை பரப்பி மக்களை பயமுறுத்தி வருகின்றனர். முக்கியமாக கோழிகளை சாப்பிட்டாலோ, முட்டைகளை சாப்பிட்டாலோ கரோனா வைரஸ் தொற்று தாக்கக்கூடும் என்று பல வதந்திகள் பரவி வருகின்றன. இதனால், பெருந்தொற்று பரவாது என்று மருத்துவர்கள் தெரிவித்து வந்தாலும், மக்கள் முட்டைகளையும், கோழிகளையும் உண்பதைத் தவிர்த்து வருவது வேதனைக்குரிய செயலாக பார்க்கப்படுகிறது.
விதவிதமான வண்ணத்தில் முட்டைகள். கரோனா தொற்றிலிருந்து காக்க வைட்டமின் -சி உணவுகளை சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முட்டையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மாணவி மோனிஷா.
அவர் வரைந்த ஓவியத்தில் முட்டை என்பது சத்தைத் தான் தருகிறது. முட்டை சோகமாய் இருப்பது போன்று வரைந்தும், எழுத்துக்கள் மூலமும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மாஸ்க் அணிந்தபடியும், கை அலம்புதல், தும்மும் பொழுது கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்.
சோகத்தில் காட்சியளிக்கும் முட்டை. உடல் வெப்பநிலையைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றை உணர்த்தும் வகையில் ஓவியம் வரைந்துள்ளார். இதன் மூலம் முட்டையை வைத்து எதையும் செய்து காட்டலாம் என்பதை மாணவி மோனிஷா நிரூபித்துள்ளார். இவரது முயற்சிக்கும் அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முட்டை ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவி. இதுகுறித்து மாணவி மோனிஷா கூறுகையில், "கரோனா வைரசானது உலகமெங்கிலும் அதிகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்க அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் முட்டை சாப்பிடுவது அல்லது இறைச்சி சாப்பிடுவதன் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக தவறாக நினைத்து, அதை தவிர்த்து வருகின்றனர். முட்டை உண்பதால் இந்த வைரஸ் தொற்று பரவாது என்பதை உணர்த்தும் வகையில், இந்த ஓவியத்தை வரைந்தேன். முட்டையில் இருந்து நமக்கு புரத சத்துக்கள் தான் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:பட்டியலின மக்களுக்கு கேரள அரசு தொகுப்பு நிவாரணம்