கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனை (PCR test) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் விட்டமின் மாத்திரை, சிங்க் மாத்திரை, கபசுர குடிநீர், ஆர்சனிக் அல்பம், ஆகியவை அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும்.
அலட்சியமாக சாலையோரம் கொட்டிக் கிடக்கும் கரோனா கிட்டுகள்
கோயம்புத்தூர்: கரோனா தடுப்பு மருந்து மாத்திரை அடங்கிய தொகுப்பு பைகள் அலட்சியமாக சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Corona kit weste in Kovai
தற்போது நியாய விலை கடைகளில் மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொகுப்பு பைகள் கோவை கரும்பு கடை பகுதியில் உள்ள வள்ளல் நகர், இலாஹி நகர் நியாய விலை கடையின் முன்புறம் சாலையோரமாக கொட்டிக் கிடந்தன.
இதுபோன்று அலட்சியமாக சாலையோரம் தொகுப்பு பைகள் கொட்டி கிடப்பதால், சாலையில் உள்ள தூசுகள் விழும் வாய்ப்பு உள்ளது என்றும், மழை வந்தால் அனைத்தும் நனைந்து போகும் அபாயமும் உள்ளதென்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.