தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 20, 2023, 9:54 PM IST

ETV Bharat / state

கோவை 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில் நாளை சென்னை செல்லாது!

கோவை 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில் நாளை சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

வேலூர்:வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷனில், இன்ஜினியரிங் பணிகள் நடந்து வருவதால், கோவை 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில் நாளை சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமும் கோவை ரயில்வே ஸ்டேஷனில் காலை, 6:15 மணிக்கும் புறப்படும், கோவை - சென்னை (12680) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வரை செல்லும். வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷனில் இன்ஜினியரிங் பணிகள் நடப்பதால், நாளை (21-ம் தேதி) ஒரு நாள் மட்டும் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும் என்றும்; சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வரை செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் மதியம், 2:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை - கோவை (12679) ரயில், காட்பாடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details