சில தினங்களுக்கு முன் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மாயமான சிறுமி தஞ்சாவூரில் இருப்பதாக குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தஞ்சை விரைந்த காவல் துறையினர், சிறுமியை மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.