தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறைந்த விலையில் எரிபொருள் சேமிப்பு - அரசுக் கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை: குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

By

Published : Jul 17, 2019, 9:56 AM IST

Updated : Jul 17, 2019, 10:17 AM IST

அரசினர் கல்லூரி மாணவர்கள் சாதனை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (Smart India Hackathon) பதிப்பு என்ற போட்டிகள் நாடு முழுவதும் 18 மையங்களில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று எரிபொருள் நிலையங்களில் குறைந்த செலவில் நீராவி சிஸ்டம் அமைப்பது என்ற தலைப்பில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் முதலிடம் பிடித்த கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

அரசினர் கல்லூரி மாணவர்கள் சாதனை

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்களை நிரப்பும்போது ஆவியாகும் 10% எரிபொருளைத் தடுக்க தற்போதுள்ள இயந்திரத்தை வாங்க 15 முதல் 16 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்றும், அதற்கு மாற்றாக முப்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் தங்களது கண்டுபிடிப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Last Updated : Jul 17, 2019, 10:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details