கோவை:மாமல்லபுரத்தில் 44-ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் அப்பேருந்துகளில் ஒரு புறம் தமிழில் நம்ம சென்னை, நம்ம செஸ் என்றும் நம்ம செஸ் நம்ம பெருமை என்ற வாசகமும் மாமல்லபுரம் கோயிலும் உள்ளது. மற்றொரு பக்கம் ஆங்கிலத்தில் "NAMMA CHESS NAMMA PRIDE" என்ற வாசகமும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இரு பக்கங்களிலும் முதலமைச்சரின் புகைப்படம் செஸ் ஒலிம்பியாட் 2022 லோகோவும் அச்சிடப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் இது போன்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:குடியரசுத்தலைவர் தேர்தல்: திரெளபதி முர்மு மீண்டும் முன்னிலை!